செய்திகள்

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முறையீடு - தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

Published On 2018-09-17 05:43 GMT   |   Update On 2018-09-17 05:43 GMT
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் உயர்நீதிமன்றத்தை எச்.ராஜா அவதூறாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. #HRaja #ChennaiHC
சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனர்.

மேலும், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாக நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை அவதூறாக பேசினால் தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், தற்போது நீதிமன்றம் எச்.ராஜா மீதான இந்த முறையீட்டை மறுத்துள்ளதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #HRaja #ChennaiHC
Tags:    

Similar News