செய்திகள்

விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய அவசியமில்லை- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2018-09-07 14:22 GMT   |   Update On 2018-09-07 14:22 GMT
குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ministerjayakumar #ministerVijayabaskar #Gutkha
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல் டீசல் விலை  உயர்வை  குறைப்பதற்கு மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்எண்ணை ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. தினகரன் வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிமைப்பட்டு நிற்பார்.

 ராஜுவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கருத்துக்கு வலு சேர்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே சட்ட வல்லுனர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை என்பது தான் அரசின் நோக்கம். தி.மு.க. மத்தியிலும் , மாநிலத்திலும் அதிக அதிகார பலத்தோடு இருந்தபோது அவர்களது விடுதலையை உறுதிப்படுத்தவில்லை.


குட்கா ஊழல் தொடர்பாக  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறியிருக்கிறார்.  ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  #ministerjayakumar #ministerVijayabaskar #Gutkha
Tags:    

Similar News