செய்திகள்

போதையில் தந்தையை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்

Published On 2018-06-06 05:37 GMT   |   Update On 2018-06-06 05:37 GMT
பெரியகுளம் அருகே போதையில் மாற்றுத் திறனாளியான தந்தையை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஸ் பிரபு (32), ராம்குமார் (30) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். விக்னேஸ் பிரபு கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஆயுதப்படை போலீசில் பணிபுரிகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ்பிரபு குடிபழக்கத்தால் மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தற்போது விக்னேஸ் பிரபு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாதுகாப்பு பணியில் உள்ளார்.

நேற்று மாலை போதையில் விக்னேஷ் பிரபு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான அவரது தந்தை செல்வராஜ் பணியில் இருக்கும் போது போதையில் இருக்கிறாயே? என கண்டித்தார். இதனால் ஆத்தரமடைந்த விக்னேஷ் பிரபு தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் அவர் மார்பில் சுட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். விக்னேஷ் பிரபுவிடம் ஆயுதப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் மற்றும் ஒரு போலீஸ்காரர் தங்களது கைத்துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை வைத்திருக்குமாறு கொடுத்துள்ளனர். அந்த துப்பாக்கியால்தான் அவர் செல்வராஜை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விக்னேஷ்பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News