செய்திகள்

மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

Published On 2018-05-14 15:11 GMT   |   Update On 2018-05-14 15:11 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். #MKStalin #KamalHaasan
சென்னை:

காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக மே 19இல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர். என கூறினார்.

கமல்ஹாசனின் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மு.க ஸ்டாலின் அதன்பின்னர் தெரிவித்தார். #MKStalin #KamalHaasan
Tags:    

Similar News