செய்திகள்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்

Published On 2018-05-08 17:14 GMT   |   Update On 2018-05-08 17:14 GMT
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #JactoGeo #Protest #Calledoff
சென்னை:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று கோட்டையை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே, தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சாலையில் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய அந்த அமைப்பினர் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழகம் முழுவதும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அரசு அழைத்துப் பேசும் வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எழும்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடந்தது. ஆலோசனைக்கு பிறகு அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாந்தகுமார் கூறியதாவது:

எங்களின் போராட்டம் தற்காலிகமாக தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்துமாறும், ஊதிய முரண்பாடுகளை களையுமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து 20-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். #JactoGeo #Protest #Calledoff
Tags:    

Similar News