செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி செலவில் புதிய முனையம் - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2018-05-02 08:05 GMT   |   Update On 2018-05-02 08:05 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. #ChennaiAirport #newterminal #centralgovt
சென்னை:

சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்க ஒப்புதல் வழங்கி மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.

மூன்று முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கவுகாத்தி, சென்னை மற்றும் லக்னோ விமான நிலையங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய முனையங்கள் அமைக்கப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மக்கள் பயன்பாடு அதிகம் உள்ளதால் அதனை விரிவுப்படுத்த வேண்டும். அதனால் புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 35 கோடி மக்கள் பயன்பெறுவர். 2027-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை அதிகரிப்புக்கு இந்த புதிய விமான நிலையம் போதுமானதாக இருக்கும். இது 2467 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்தார். #ChennaiAirport  #newterminal #centralgovt

Tags:    

Similar News