search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new terminal"

    • புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
    • டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சர்வதேச புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தொடங்கியது.அதன் பின்னர் மே மாதம் 3-ந் தேதி, 3 விமானங்கள் சோதனை அடிப்படையில், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மேலும் சில விமானங்கள் புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது.

    ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமானமுனையத்தில், முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டபோது, சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டதால் அதனை சரி செய்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் முதல் வாரத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து, முழு அளவில் விமானங்கள் இயக்கப்படவில்லை. புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

    கடந்த 13-ந் தேதியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், இந்த புதிய முனையத்தில் வருகை, புறப்பாடுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்தபடியாக வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்கு இயக்கப்படும் யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவைகளும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று முதல், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல்-2 ல் இருந்து இயங்கத் தொடங்கி உள்ளது. இதன்மூலம் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு புதிய விமான நிலையத்தில் இருந்து விமான சேவை அதிகரித்து இயக்கப்படுகிறது. சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 சர்வதேச விமான சேவைகள் இன்று முதல் முழுஅளவில் இயங்கத் தொடங்கிஉள்ளன.

    பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் அடுத்த சில நாட்களில் அல்லது ஜூலை முதல் வாரத்தில், புதிய முனையத்தில் இருந்து இயங்கும் என்று தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. அதன்பின்னர் தற்போது செயல்பாட்டில் இருக்கும், டெர்மினல்-3 என்ற (டி 3)பழைய சர்வதேச முணையம், முழுமையாக மூடப்படும். மேலும் டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது. இதன்பின்னர் புதியமுனையத்தில் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்க இருப்பதாக இந்திய விமானநிலைய ஆணையம் அறிவித்துள்ளது. #ChennaiAirport
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் பயணிகள் வரவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலை இப்படியே நீடிக்கும்பட்சத்தில் தற்போது இருக்கும் முனையங்கள் நெரிசல் நிறைந்ததாக மாறக்கூடும்.

    இந்த நிலையை சரிசெய்ய, புதிய முனையம் கட்ட இருப்பதாக விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார். இந்த புதிய முனையமானது 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருப்பதாகவும், சுமார் 42 முதல் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் வாங்கும் பணியும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #ChennaiAirport
    ×