செய்திகள்

ஊஞ்சல் ஆடியபோது தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி

Published On 2018-04-23 11:26 GMT   |   Update On 2018-04-23 11:26 GMT
சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் ஊஞ்சல் ஆடியபோது தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம்:

சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை எம்.எஸ். நகரில் வசித்து வருபவர் ராஜன், கூலி தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் (வயது 14). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தான்.

ராஜனின் வீட்டுக்கு அவரது மூத்த மகள் வந்திருந்தார். அவரது குழந்தைக்காக வீட்டில் தொட்டில் கட்டப்பட்டு இருந்தது. நேற்று மாலை ராஜேஷ் தொட்டிலில் அமர்ந்தபடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் செல்போனை வாங்குவதற்காக ராஜேசின் அக்காள் வீட்டுக்குள் வந்தார்.

அப்போது தொட்டிலின் கயிறு இறுக்கியதில் ராஜேஷ் இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். தொட்டிலில் ஊஞ்சல் ஆடியபோது அதன் கயிறு ராஜேசின் கழுத்தை இறுக்கி இருப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாததால் அவனை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News