செய்திகள்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ரெயில் மறியல் முயற்சி- மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது

Published On 2018-04-16 14:47 GMT   |   Update On 2018-04-16 14:47 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் , விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை ரத்து செய்யக்கோரியும், திருச்சியில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று காலை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மறியலில் ஈடுபடுவதற்காக மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் பொன்.முருகேசன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டப்படி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற பொன்.முருகேசன் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News