செய்திகள்

ரத யாத்திரையை எதிர்த்து சட்டசபையில் இருந்து காங். எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு - சாலை மறியல்

Published On 2018-03-20 06:46 GMT   |   Update On 2018-03-20 06:48 GMT
ரத யாத்திரைக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். #RathaYatra #TNAssembly #CongressMLAs
சென்னை:

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

ஆனால், முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் சட்டமன்றத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டனர்.



தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் சபையில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ரத யாத்திரைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வும் தனியாக அமர்ந்து, ரத யாத்திரைக்கு எதிராக மறியலில் ஈடுபட்டார். #RathaYatra #TNAssembly #CongressMLAs  #tamilnews
Tags:    

Similar News