செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2018-03-14 10:15 GMT   |   Update On 2018-03-14 10:15 GMT
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2 மாதமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தற்போது நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். #tamilnews

Tags:    

Similar News