செய்திகள்

குரங்கணி காட்டுத்தீயில் பலியானவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Published On 2018-03-12 05:24 GMT   |   Update On 2018-03-12 05:24 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். #TheniFire
சென்னை:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலை. பசுமைப் போர்வை போர்த்தியது போல காணப்படும் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து அமைந்துள்ள இப்பகுதியில் மலையேற்ற பயிற்சியும் நடைபெறும்.

அப்போது, சென்னையிலிருந்து மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த மாணவர்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினர். இதில், 9 பேர் பலியாகியுள்ள நிலையில் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- "குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்." என பதிவிட்டுள்ளார். #TheniFire  #KamalHaasan
Tags:    

Similar News