செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை - 5 டன் பழங்கள் பறிமுதல்

Published On 2018-03-10 23:08 GMT   |   Update On 2018-03-10 23:08 GMT
கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் இன்று அதிகாலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:

கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் இன்று அதிகாலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் என பலவிதமான பொருள்களும் கிடைக்கும். இங்குள்ள பழங்கள் மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலர் ரசாயனங்கள் கலந்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் இன்று அதிகாலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பழ வியாபாரிகள் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்று வருவதாக புகார்கள் வந்தன. எனவே, இன்று அதிகாலை கோயம்பேட்டில் திடீரென சோதனை நடத்தினோம். பழ வியாபாரிகள் வைத்திருந்த பழங்களை சோதனையிட்டோம். அப்போது, செயற்கை முறையில் பழுக்க வைத்த 5 டன் பழங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News