செய்திகள்

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு- நாராயணசாமி

Published On 2018-03-03 09:56 GMT   |   Update On 2018-03-03 09:57 GMT
கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்துள்ளது என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பா.ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்துள்ளது.

ப.சிதம்பரம் தொடர்ந்து பா.ஜனதாவையும், பொருளாதார கொள்கைகளையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்து வருகிறார். இதற்காகவே பழிவாங்கும் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை. புகார்தாரரான இந்திரா முகர்ஜி மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டும்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கெடு கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகம், தமிழகம்- புதுவைக்கு காவிரி விவகாரத்தில் துரோகம் இழைத்து வந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரை நாங்கள் சந்தித்தபோது வலியுறுத்தி உள்ளோம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.

இதுதொடர்பாக தமிழக அமைச்சர்கள் சந்திக்க நேரம் கேட்டபோது பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் பிரச்சனையை பேச யார் நேரம் கேட்டாலும், பிரதமர் நேரம் ஒதுக்கி பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News