இந்தியா

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா?- வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கும் உச்சநீதிமன்றம்

Published On 2024-05-08 11:56 GMT   |   Update On 2024-05-08 11:56 GMT
  • அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
  • மக்களவை தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து யோசிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவிப்பு.

டெல்லி மாநல மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அவர் தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றால், நாங்கள் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம். அதனால் மே 5-ந்தேதி (நேற்று) இருதரப்பு தயாராக வர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

நேற்று இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இடைக்கால ஜாமின் வழங்கினால், அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்து. அதற்கு அவர்களும் கையெழுத்திடமாட்டார் என உறுதியளித்தது.

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது. அடுத்த விசாரணை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை மார்ச் 10) அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை மே 10-ந்தேதி) இது தொடர்பான விசாரணை நடைபெறும். அன்றைய தினம் இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

Tags:    

Similar News