செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2018-02-18 15:42 GMT   |   Update On 2018-02-18 15:42 GMT
பிற மாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Cauvery
கோவை:

நாட்டிலேயே அமைதி பூங்காவாக விளங்குவது தமிழகம்தான். பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நிலைமையை பாருங்கள். தமிழகத்தின் நிலை உங்களுக்கு தெரியும்.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும்.

காவிரி வழக்கில் சரியாக வாதாடவில்லை என துரைமுருகன் கூறியது வடிகட்டிய பொய்யாகும். நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது அ.தி.மு.க. அரசு தான். மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. அரசு காவிரி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தி.மு.க.வின் பங்கு எதுவும் இல்லை. காவிரி பிரச்னை உருவாவதற்கு தி.மு.க. தான் காரணம். ஓ.பி.எஸ்க்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #Cauvery #tamilnews
Tags:    

Similar News