செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் கண் பரிசோதனை

Published On 2018-02-16 12:37 GMT   |   Update On 2018-02-16 12:37 GMT
தியாகராய நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் கண் பரிசோதனை நடைபெற்றது.#eyetesting #edappadipalanisamy

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 4-ந்தேதி தியாகராய நகரில் உள்ள ராஜன் கண் ஆஸ்பத்திரியில் கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதன் பிறகு வீடு திரும்பிய எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தார். ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் மோகன் ராஜன் எடப்பாடி பழனி சாமியின் வீட்டுக்கு சென்று அவரது கண்ணை பரிசோதித்தார்.

அப்போது முற்றிலும் குணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து கண்ணாடி அணிந்திருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதன் பிறகு கோட்டைக்கு வந்து அலுவலக பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.

இந்த நிலையில் மீண்டும் கண் பரிசோனை செய்து கொள்ள தியாகராயநகரில் உள்ள ராஜன் கண் ஆஸ்பத்திரிக்கு நேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

அவருக்கு தலைமை மருத்துவர் மோகன்ராஜன் பரிசோதனை செய்தார். இதில் முழுமையாக குணம் அடைந்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து 15 நாட்களுக்கு கண்ணாடி அணிந்திருக்கும்படி தெரிவித்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் இருந்தார். #tamilnews #eyetesting #edappadipalanisamy

Tags:    

Similar News