search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் பரிசோதனை"

    • வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதுரை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, பாப்புரெட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அறக்கட்டளை தலைவர் லதா வரவேற்றார். இந்த முகாமில் அ.தி.மு.க பேரூர் செயலாளர் அசோக்குமார், கவுன்சிலர் சூர்யா, காந்திதாஸ், பாபு, ஆட்டோ சேகர், முருகன் உள்படபலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கோவை சங்கரா கண் மருத்து வமனை டாக்டர் சுவாதி தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கராத்தே கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராமராஜூ காட்டன் மில்ஸ் ஸ்தாபகர் என்.கே.ராமராஜூ 113 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம ராஜூ காட்டன் மில்ஸ் ஸ்தாபகர் என்.கே ராம ராஜூவின் 113-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆலை வளாகத்தில் ந நடைபெற்ற விழாவிற்கு இயக்குநர் என்.ஆர்.கே. ஸ்ரீ கண்டன் ராஜா தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை யின் சார்பாக ரத்ததான முகாமும், சக்தி கண் மருத்துவமனை சார்பாக கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

    முகாமில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தலைவர் மோகனரங்கன், தலைமை நிதிநிலை அதிகாரி விஜய் கோபால், தலைமை பொது மேலாளர். சந்தோஷ், பொது மேலாளர் சுந்தரராஜ் துணை பொது மேலாளர் தங்கராஜ், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    • சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பஸ்களில் டிரைவராக பணியாற்றும் 40 வயது மற்றும் அதற்குமேல் வயது உள்ள டிரைவர்கள் ஆண்டுதோறும் தங்களது கண்பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக கண்பார்வை பிரச்சினை மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு இதன் மூலம் எளிதான மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வழக்கமான பஸ் ஓட்டும் பணியை தவிர்ப்பதற்காகவும், அதற்கு மாற்றாக எளிதான வேலைக்கு செல்லவும் 8 மாநகர பஸ் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது. அவர்களில் அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் கண்பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற போது போல் போலியான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். இதில் அந்த சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதே போல் மற்ற பணிமனைகளிலும் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கை வழங்கி எளிதான வேலைக்கு மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் டிரைவர் பணியை தவிர்த்து மற்ற வேலைக்கு மாற்றப்பட்டவர்கள் சமர்ப்பித்த டாக்டர்களின் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • மதுரை திருமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தனியார் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    இதற்கான ஏற்பாட்டை 23-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் செய்திருந்தார். நகர தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வைத்தார். இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பார்வை உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. நகர செயலாளர் பால்பாண்டி, நிர்வாகிகள் செல்லப்பாண்டி, துரை சண்முகம், முன்னாள் கவுன்சிலர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.
    • 31 பேர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் புதியம்புத்தூர் ரெடிமேட் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப், தூத்துக்குடி ராயல் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப் சங்கம், புதியம்புத்தூர்இளங்கோவன் அறக்கட்டளை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் மற்றும் இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 256 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 31 பேர்கள் கண் ஆபரேஷன் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது. முகாமில் சிறப்பு மருத்துவர் சிப்ரா, ராயல் பியர்ல் சிட்டி வேதமாணிக்கம், ஜெயம் மண்டலத் தலைவர் ஜெயக்குமார், ஜே.கே.ஆர் முருகன், முத்தமிழ் செல்வன், லயன்ஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாரத் நாச்சியப்பன், பைரவ மூர்த்தி, மாநில இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார். மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கச்சைகட்டி பாண்டி, தண்டீசுவரன், பொதும்பு செல்வம், புதுப்பட்டி கார்த்தி, பரவை ராமு, எம்.ஏ.முத்து, காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிஷா தலைமையில் 82 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 41 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்

    • யங் இண்டியா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • 600 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை யங் இண்டியா பப்ளிக் பள்ளி நிர்வாகம், திருப்பூர் தி ஐ பவுண்டேசன்,மலர் பல் மருத்துவமனை இணைந்து நடத்தியது. யங் இண்டியா பப்ளிக் பள்ளி செயலர் டி.சிவசண்முகம் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு யங் இண்டியா பப்ளிக் பள்ளியின் முதல்வர் கே.அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த முகாமில் திருப்பூர் தி ஐ பவுண்டேஷனைச் சேர்ந்த டாக்டர் .வர்ஷா,சரவணகுமார், மற்றும் மலர் பல் மருத்துவமனையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர். நவமணி ஆகியோர் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.இம்முகாமில் சுமார் 600 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.பள்ளி துணைமுதல்வர்கள் சசிகலா மற்றும் நிஜிலாபானு ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • செயலாளர் ராஜேஷ்சரவணன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் கல்லணை கலைவாணர் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கோல்டன் ஜூப்ளி அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, அலங்காநல்லூர் ஆரம்ப கண் பரிசோதனை மையம் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு தலைமை தாங்கினார்.

    பசுபதி, மணிகண்டன், அரிமா சங்க நிர்வாகிகள் ரகுபதி, சோமு, ஜெயராமன், கண்ணன் முன்னிலை வகித்தனர். கிட்டப் பார்வை,, தூரப்பார்வை, கண்ணில் நீர் கட்டி கோர்த்தல், அடிபட்டகண், நீர் வடிதல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் பிரித்திவிராஜ் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். பள்ளி தலைவர் விஜயன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமை மதுரை கோல்டன் ஜூப்ளி அரிமா சங்க தலைவர் ராம்தாஸ், செயலாளர் ராஜேஷ்சரவணன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது.
    • முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அரிமா சங்கம், நகராட்சி நிர்வாகம், திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை,மற்றும் சிகிச்சை முகாம் பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது. 26 நபர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலவச கண் சிகிச்சை முகாமை பல்லடம் நகர மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். அரிமா சங்க நிர்வாகிகள் நடராஜன், குமார், பாலன், மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார்.

     அலங்காநல்லூர்

    பாலமேட்டில் உள்ள தனியார் மகாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்து வமனை முகாம் ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், தானம் அறக்கட்டளையின் கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா மற்றும் பாலமேடு வட்டார களஞ்சிய ஒருங்கி ணைப்பாளர் வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

    முகாமிற்கான பணிகளை பாலமேடு வட்டார களஞ்சிய தலைவிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 230க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    ×