

திருமங்கலம்
திருமங்கலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதற்கான ஏற்பாட்டை 23-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் செய்திருந்தார். நகர தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வைத்தார். இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பார்வை உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. நகர செயலாளர் பால்பாண்டி, நிர்வாகிகள் செல்லப்பாண்டி, துரை சண்முகம், முன்னாள் கவுன்சிலர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.