இலவச கண் பரிசோதனை முகாம்

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார்.
இலவச கண் பரிசோதனை முகாம்
Published on

வாடிப்பட்டி

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதுரை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, பாப்புரெட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறக்கட்டளை தலைவர் லதா வரவேற்றார். இந்த முகாமில் அ.தி.மு.க பேரூர் செயலாளர் அசோக்குமார், கவுன்சிலர் சூர்யா, காந்திதாஸ், பாபு, ஆட்டோ சேகர், முருகன் உள்படபலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கோவை சங்கரா கண் மருத்து வமனை டாக்டர் சுவாதி தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கராத்தே கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com