புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. 31 பேர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.
மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

புதியம்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் புதியம்புத்தூர் ரெடிமேட் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப், தூத்துக்குடி ராயல் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப் சங்கம், புதியம்புத்தூர்இளங்கோவன் அறக்கட்டளை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் மற்றும் இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 256 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 31 பேர்கள் கண் ஆபரேஷன் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது. முகாமில் சிறப்பு மருத்துவர் சிப்ரா, ராயல் பியர்ல் சிட்டி வேதமாணிக்கம், ஜெயம் மண்டலத் தலைவர் ஜெயக்குமார், ஜே.கே.ஆர் முருகன், முத்தமிழ் செல்வன், லயன்ஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com