செய்திகள்

கோவை- ஊட்டியில் கடும் பனி பொழிவு: பொதுமக்கள் அவதி

Published On 2018-01-22 16:45 GMT   |   Update On 2018-01-22 16:45 GMT
கோவை, ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஊட்டி:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பனிப்பொழிவுடன் அதிக குளிர் நிலவி வருகிறது. ஊட்டியில் கடந்த ஒரு மாதமாக குளிர் வாட்டி வதைத்து வருகிறது. உறை பனியும் அதிகம் காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் அதிக குளிர் நிலவுகிறது.

பனிப்பொழிவு காரணமாக புல் வெளிகள் வெள்ளை பட்டாடை உடுத்தியது போல் காணப்படுகிறது. காலை 9 மணி வரை கடும் குளிர் நிலவுவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் சொட்டர் அணிந்தபடி பணிக்கு செல்கிறார்கள். கடும் குளிர் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

கோவையிலும் ஒரு மாதமாக குளிர் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டுகிறது. இதனால் காலையில் வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதியடைகிறார்கள். காலை 8 மணி வரை இந்த குளிர் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள்.#tamilnews

Tags:    

Similar News