செய்திகள்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2018-01-22 06:54 GMT   |   Update On 2018-01-22 06:54 GMT
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்படும் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BusFareHike
சென்னை:

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இன்று விடுப்பு எடுத்துக் கொண்டதால், அவர் விசாரிக்க வேண்டிய வழக்குகளை மூத்த நீதிபதி ஆர்.சுப்பையா, நீதிபதி டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது வக்கீல் ஒருவர் ஆஜராகி, ‘தமிழக அரசு திடீரென பஸ் கட்டணத்தை உயர்த்தி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சட்ட விதிகளின் அடிப்படையில் முறையாக பிறப்பிக்கப்படவில்லை.

நடு இரவில் பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டு, அதிகாலையில் அரசாணையை வெளியிட்டுள்ளனர். எனவே, பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

‘முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரிக்கும். நீங்கள் தாக்கல் செய்யும் வழக்கை இன்றே எங்களால் விசாரணைக்கு ஏற்க முடியாது’ என்று உத்தரவிட்டனர். #Tamilnews #BusFareHike
Tags:    

Similar News