செய்திகள்

சுயேட்சையாக வெற்றி பெற்றவரின் முதல்வர் கனவு பலிக்காது: வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

Published On 2018-01-20 10:03 GMT   |   Update On 2018-01-20 10:03 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றவரின் முதல்தவர் கனவு பலிக்காது என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி பேசினார்.

தஞ்சாவூர்:

தஞ்சை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் 101-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் தலைமை தாங்கினார். கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.

கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி, கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பரசுராமன் எம்.பி, வெள்ளூர் ராஜீ, மருத்துவ அணி பொருளாளர் வடிவேல், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், திராவிட வங்கி தலைவர் பஞ்சாபிகேசன், மற்றும் முருகேசன், சண்முகபிரபு, சி.வி.ஜெகதீசன், பாலைரவி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் நாகராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தம்பிதுரை, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தனபால், ஒன்றிய துணை செயலாளர் குளிச்சப்பட்டு இளவரசி கலியபெருமாள், அ.தி.மு.க. பிரதிநிதி முத்துகிருஷ்ணன், தஞ்சை ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மோகன்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி பேசும் போது கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா விரைவில் சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.கவை தனது குடும்ப சொத்தாக மாற்றி விடலாம் என்று ஒருவர் நினைத்தார். ஆனால் அ.தி.மு.க ஜனநாயக கட்சி 1½ கோடி மக்களின் கட்சி என்ற அடிப்படையில் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் ஒன்றாக இணைந்து ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துகின்றனர்.

சுயேச்சையாக வெற்றி பெற்றவர்கள் வரலாறு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உள்ளது. ஆனால் அவர்கள் எல்லாம் முதல்வர் ஆனது இல்லை. ஜெயலலிதாவின் இறப்பை சிலர் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலவிதமாக ஜெயலலிதா இறப்பு குறித்து பேசுகின்றனர். அவர்கள் எப்படி அ.தி.மு.கவை கட்டி காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News