search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைத்திலிங்கம் எம்.பி."

    பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் திலகர் திடல் வரை இன்று காலை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி, சுகாதாரத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் திலகர் திடல் வரை இன்று காலை நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலைவகித்தார். அமைச்சர் துரைக்கண்ணு சிறப்புரை ஆற்றினார்.

    பேரணியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நடைபெற்றது.

    பேரணியையொட்டி பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் வண்ண கொடிகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் விரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 8 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திரட்டப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #parliamentelection
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற தேர்தல் பூத்  கமிட்டி அமைப்பது குறித்த பெரம்பலூரில் நடந்த மாவட்ட  அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்னர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம். பி.யுமான வைத்திலிங்கம் நிருபர்களிடம்    கூறியதாவது:- 

    திருப்பதி ஏழுமலையான் குமாரசாமிக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும், நிலத்தோட அமைப்பில் காவிரி உபரிநீரை தேக்கி வைக்க முடியாது. அதனால் நிபுணர்களை கேட்டபோது அவற்றை தேக்கி வைக்க முடியாது. எனவே ஏரி, குளம், குட்டைகளில் மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண நலம் பெறுவார். அவரை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்திப்பார். தி.மு.க. கட்சியை எதிர் கட்சியாகவே நாங்கள் நினைக்க வில்லை. அதனால் தி.மு.க. பிளவுபட்டாலும்,  பிளவுபாடாவிட்டாலும் நாங்கள் கவலை கொள்வதில்லை. 

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்றார். 

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். #parliamentelection
    பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்து பெரம்பலூரில் நாளை அதிமுக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கட்சியினர் திரண்டு வர ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார். #vaithilingammp
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நாளை (28-ந்தேதி) மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு பேசுகிறார்.
    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். டி.ராமச்சந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தல் பணி குறித்தும், பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், சிறப்பு ஆலோசனை கூட்டம்  பெரம்பலூர் துறைமங்கலம் ஜே.கே. மகாலில் நாளை (28-ந் தேதி, சனிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. 

    இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இக்கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், அனைத்து நிலை பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 

    இவ்வாறு ஆர்.டி.ராமச்சந் திரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார். #vaithilingammp
    ×