தமிழ்நாடு

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கு - சென்னையில் என்.ஐ.ஏ. விசாரணை

Published On 2024-04-27 09:55 GMT   |   Update On 2024-04-27 10:19 GMT
  • முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
  • திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News