செய்திகள்

கவர்னர் ஆய்வு நடத்துவதை நிறுத்த வேண்டும்: காங். மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2018-01-10 09:35 GMT   |   Update On 2018-01-10 09:38 GMT
தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் ஆய்வு ஆய்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

சென்னை:

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று நடந்தது.

மாநில தலைவர் திருநாவுகரசர் தலைமை வகித்தார். மூத்த தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சிரஞ்சீவி, செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தனர்.

ஒக்கி புயலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தலைமையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வருகிற ஜூலை காமராஜர் பிறந்த தினத்துக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுவது.

தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரண நிதி வழங்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டிப்பது.

தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடுவதை கண்டிப்பதுடன் கவர்னரின் அத்துமீறிய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News