search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக கவர்னர்"

    • அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது.
    • நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது

    சென்னை:

    சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

    சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
    • தமிழக கவர்னர் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வந்தபோது தோடரின மக்கள் வசிக்கும் முத்தநாடு கிராமம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் 18-ந்தேதி சென்னை திரும்பினார்.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது 5 நாட்கள் சுற்றுப்பயணமாக மீண்டும் ஊட்டிக்கு வருகிறார். இதற்காக அவர் நாளை மறுநாள் (30-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்க்கமாக மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

    தொடர்ந்து 31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு அவர் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து நேரில் பார்வையிடுகிறார். பின்னர் 1-ந்தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

    தொடர்ந்து 2-ந்தேதி குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். 3-ந்தேதி குந்தாவில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு செல்கிறார். பின்னர் 4-ந் தேதி காலை 11 மணியளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மார்க்கமாக சென்னை சென்றடைகிறார்.

    தமிழக கவர்னர் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
    • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதைதொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில், பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    இதுகுறித்து திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

    ஆளுநர் தனியாக ஒரு அரசை நடத்த முயற்சி செய்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    பொன்முடி பதவி ஏற்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக, அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை கவர்னர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தமிழக அரசுடன் கவர்னர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

    இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார். ஆனாலும் இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக அரசிடம் இருந்து கடிதம் வந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

    எனவே பொன்முடி விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு மறுபடியும் கடிதம் எழுதலாமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

    இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார். ஆனாலும் இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக அரசிடம் இருந்து கடிதம் வந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

    எனவே பொன்முடி விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு மறுபடியும் கடிதம் எழுதலாமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    • பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது.
    • துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி தனது கைப்பாவையாக கவர்னர் ஆர்.என்.ரவியை பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். அப்போது யார்-யாரெல்லாம் இன்றைக்கு பழிவாங்குகிற நடவடிக்கையில் ஈடுபட்டார்களோ? அவர்கள் மீது என்ன பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நிச்சயமாக மனிதாபிமானம் பார்க்க மாட்டோம்.

    நிச்சயமாக தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.

    கே: பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம் என்ற சூழலில் கவர்னர் டெல்லி சென்று விட்டாரே? பொன்முடி பதவி ஏற்பு எப்போது நடைபெறும்?

    ப: கவர்னர் இன்றைக்கு தான் சென்னை வருகிறார். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது. கவர்னர் இன்று பொன்முடி பதவி ஏற்புக்கு தேதி சொல்வார் என்று நம்புகிறோம். ஏதாவது விளக்கங்கள் கேட்டால் சட்டத்துறை உரிய விளக்கங்கள் தருவதற்கு சட்டத்துறை எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது.

    தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு பதவி ஏற்பு நடத்தலாம்.

    கே: பி.எட். மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கவர்னர் மாளிகையில் கேட்டிருப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளதே?

    ப: இன்றைக்கு வேந்தர்களுக்கு திடீர் திடீரென பதவி நீட்டிப்புகளை அவர் தந்து கொண்டிருக்கிறார். துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    ஏதோ அவர் ஒரு தனி ராஜ்ஜியம் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தனி ராஜ்ஜியம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சனிக்கிழமை மதியம் அவர் சென்னை திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    டெல்லியில் அவர் யாரை சந்திக்க உள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த காரணத்தால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இதனால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலை கடிதம் எழுதி உள்ளார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.20 மணிக்கு விஸ்காரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இன்றும் 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில் அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
    • பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் இன்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 1166 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.

    கேரளாவை சேர்ந்த டிரைவர் விஷ்ணுவிற்கு 13 விருதுகளை அவர் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் வரவேற்றார். பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
    • மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்து கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    திருப்பூர்:

    பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு மத்திய அரசின் சார்பாக சூரஜ் திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்தும் கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    • போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.
    • போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.

    கிண்டி:

    கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

    கவர்னரை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    * போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்.

    * போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.

    * போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.

    * போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
    • கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருள்களின் விவரங்கள் குறித்த பட்டியலையும் கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

    • அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
    • சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    'அனைவரும் சமம்' என கூறிய அய்யா வைகுண்டர் சனாதனவாதியா? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.

    அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.

    அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்" என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×