செய்திகள்

புத்தாண்டையொட்டி நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2018-01-01 14:27 GMT   |   Update On 2018-01-01 14:27 GMT
ஆங்கில புத்தாண்டையொட்டி நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஊட்டி:

ஆங்கில புத்தாண்டையொட்டி நீலகிரியில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று நட்சத்திர விடுதி, கேளிக்கை மையம், பொழுதுபோக்கு இடங்களில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் தீ மூட்டி புத்தாண்டை வரவேற்றனர். தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், பைக்காரா, முதுமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டையொட்டி மதுக்கடைகளில் கூட்டம் அதிகரித்தது. இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் அதிக போலீசார் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூரில் இருந்து பழனிக்கு தற்போது பல்வேறு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வருகிறார்கள்.

இவர்கள் மலை பாதையில் குறுக்கு வழியை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது மலை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் குறுக்கு மலை பாதை வழியாக பக்தர்கள் பாத யாத்திரை செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் காட்டு யானை குட்டியுடன் ரோட்டை கடக்க முயன்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி காத்து இருந்தனர்.

இதனால் வாகனங்கள் இரு புறமும் நீண்ட வரிசையில் காத்து இருந்தன. யானை குட்டியுடன் ரோட்டை கடந்த பின்னர் தான் வாகனங்கள் சென்றது. #tamilnews

Tags:    

Similar News