செய்திகள்

விபத்தில் 2 மாணவர்கள் பலி: அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது

Published On 2017-12-28 12:28 GMT   |   Update On 2017-12-28 12:28 GMT
வத்தலக்குண்டு அருகே விபத்தில் 2 மாணவர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் பட்டிவீரன்பட்டி பகுதிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்ற தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் காளிதாஸ், சரண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

ஆட்டோ டிரைவர் சரவணன், மாணவர்கள் நவீன்குமார், ராஜூ, ஜவகர்ராஜ், சபரீஸ்வரன், மற்றொரு நவீன்குமார், அஜய், மருதுபாண்டி மற்றும் நிவாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் மற்றும் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

அரசு பஸ்டிரைவர் வேடசந்தூரை சேர்ந்த ரெங்கதுரை, லாரி டிரைவர் வத்தலக்குண்டுவை சேர்ந்த நாகராஜன், கார் டிரைவர் லட்சுமணக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்திற்கான காரணம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் இருந்து ஊருக்குள் வரும் பகுதி மேடாக உள்ளது. இங்கு வேகத்தடை எதுவும் இல்லாததால் அதிவேகமாக வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் போக்குவரத்து போலீசார் இந்த சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். போலீசாரை கண்டதும் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போட்டு நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.

இந்த விபத்திற்கு முக்கியமான காரணம் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிவருவதாகும். 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஆட்டோவில் 12 மாணவர்கள் பயணித்துள்ளனர். ஆட்டோ டிரைவர்களும் திடீரென சாலையில் நிறுத்துவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.

மோட்டார் வாகன ஆய்வாளர் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News