செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2017-12-24 11:22 GMT   |   Update On 2017-12-24 11:22 GMT
தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானல் மற்றும் மன்னவனூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மன்னவனூர்:

மலைகளின் இளவ ரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாகவே குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. கேரள பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டுமே வந்து சென்றனர்.

இதனால் பயணிகள் நடமாட்டம் இன்றி முக்கிய சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களும் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து வந்தனர்.

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. மோயர் பாய்ண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர்.

மன்னவனூர் எழும்பள்ளம் ஏரி, ஆடு ஆராய்ச்சி நிலையம், முயல் பண்ணை ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு கேரட் விளைச்சல் ஓரளவிற்கு கைகொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றுப்பாலம் அருகே மொத்தமாக கேரட் கொள்முதல் செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் கேரட்டுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மேலும் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News