செய்திகள்

ஒக்கி புயல் பாதிப்புக்கு ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2017-12-19 05:03 GMT   |   Update On 2017-12-19 05:03 GMT
ஒக்கி புயல் நிவாரணமாக மத்திய அரசு நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

ஒக்கி புயல் தாக்கி, கன்னியாகுமரி, மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டும், மீனவர்கள் இறந்தும் 21 நாட்களான பின்பும், தமிழக முதல்வர் அவர்கள் நிவாரண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான மத்திய அரசு நிதியை கோரவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும் வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் மத்திய அரசு நிதியிலிருந்து ரூ.2000 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பிரதமரின் வருகையை பயன்படுத்தி தமிழக முதல்வர் மத்திய அரசின் உதவியை உடனே கோர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News