செய்திகள்
அப்துல்கலாம் மணிமண்டப பகுதியில் கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ராமேசுவரம் கோவிலுக்கு ஜனாதிபதி 23-ந்தேதி வருகை: மண்டபம் ஹெலிபேட் தளத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2017-12-14 05:35 GMT   |   Update On 2017-12-14 05:35 GMT
வருகிற 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேசுவரம் வருகிறார். இதையொட்டி மண்டபம் ஹெலிபேட் தளத்தில் கலெக்டர் நடராஜன் இன்று ஆய்வு செய்தார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். காசி போன்று புகழ்பெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23-ந்தேதி வருகை தந்து சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அன்றைய தினம் காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 10.30 மணி அளவில் மதுரை வருகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிபேட் தளம் செல்கிறார்.


பின்னர் கார் மூலம் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும் அவர் அங்கு தரிசனம் செய்து விட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி ராமேசுவரத்தில் தற்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நடராஜன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளம், அப்துல் கலாம் மணி மண்டபம் பகுதிகளில் அவர் ஆய்வு நடத்தினார்.

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்ல உள்ள இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்தும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News