செய்திகள்

திண்டுக்கல் அருகே பள்ளி பேருந்து - அரசு பஸ் மோதல்

Published On 2017-12-13 12:31 GMT   |   Update On 2017-12-13 12:31 GMT
திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது பள்ளி பேருந்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே நத்தத்தில் இருந்து மங்களம் பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இதேபோல் நத்தம் தனியார் பள்ளியை சேர்ந்த பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது.

மெய்யனம்பட்டியை அடுத்த ஊராலிபட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. திடீரென சாலையின் குறுக்கே 2 பள்ளி மாணவர்கள் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பள்ளி பேருந்தை டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து சாலையில் சிதறியது. இதனால் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அலறியடித்துக்கொண்டு சாலையில் இறங்கினர். பேருந்தை மெதுவாக இயக்கி வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதிஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். சைக்கிளில் வந்த மாணவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.

அதன்பின்பு அரசு பஸ் பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News