செய்திகள்

கரூரில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2017-12-12 12:50 GMT   |   Update On 2017-12-12 12:50 GMT
கரூர் நகராட்சி காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரூர்:

கரூர் நகராட்சி காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து அவர் கூறியதாவது:

காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுற்றுபுற பகுதிகளை தூய்மையாக வைத்துகொள்ளவும், நிலத்தடி தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிப்பு பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து மூடிவைக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதில் மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு ஆகியவசதிகள் குறித்து பொது மக்களிடமிருந்து வரபெற்ற கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது.

உடன் நடவடிக்கை பட்டா இல்லாமல் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு வருவாய் துறை முலம் பட்டா வழங்கபடவுள்ளது. நாள் தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி, மற்றும் ஊராக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News