செய்திகள்

பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி

Published On 2017-11-28 10:11 GMT   |   Update On 2017-11-28 10:12 GMT
பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான். டெங்கு காய்ச்சலுக்கு பழனி பகுதியில் இதுவரை 27 பலியாகி உள்ளனர். இதனால் பழனி பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
பழனி:

பழனி மதினா நகரை சேர்ந்தவர் சேக்பரீத். டீ மாஸ்டராக உள்ளார். அவரது மனைவி அனீஸ்பாத்திமா. இவர்களது மகன் சித்திக் (வயது 6). இவன் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களாக சித்திக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். உடனே பெற்றோர் பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்களது மகனை சேர்த்தனர்.

அப்போது அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சித்திக் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

டெங்கு காய்ச்சலுக்கு பழனி பகுதியில் இதுவரை 27 பலியாகி உள்ளனர். இதனால் பழனி பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News