செய்திகள்

மாணவர்களுக்காக தனி பேருந்து இயக்காதது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2017-11-23 06:55 GMT   |   Update On 2017-11-23 06:55 GMT
மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு தனி பேருந்து இயக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:

அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் அதிக அளவில் தொங்கிக்கொண்டும், பேருந்து மேற்கூரையில் ஏறியும் ஆபத்தான பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இப்படி பயணம் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன், மாணவர்களும் விபத்தில் சிக்க நேரிடுகிறது.



இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒரு மனு தாக்கல் செய்தார். மாணவர்கள் பேருந்து மேற்கூரைகளில்  பயணம் செய்தது மற்றும் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்த புகைப்படங்களை காட்டி அவர் முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்க மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Tags:    

Similar News