செய்திகள்

மாநகராட்சிக்கு வரி-வாடகை பாக்கி: வியாசர்பாடியில் 26 கடைகளுக்கு சீல்

Published On 2017-10-25 09:18 GMT   |   Update On 2017-10-25 09:18 GMT
வியாசர்பாடியில் சொத்து வரி மற்றும் வாடகை செலுத்தாத 26 கடைகளும் சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பெரம்பூர்:

வியாசர்பாடி சர்மா நகர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜவுளிக்கடை, வாட்டர் கேன் கடை உள்ளிட்ட கடைகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல் இருந்தன.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் சொத்துவரி கட்டவில்லை. இந்த நிலையில் மண்டல உதவி ஆணையர் விஜயகுமார், உதவி வருவாய் ஆணையர் சூர்யபானு, திருநாவுக்கரசு அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது சொத்துவரி கட்டாத 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல வியாசர்பாடியில் சொத்து வரி கட்டாத 12 கடைகளும் சீல் வைக்கப்பட்டது.

கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட ஜவுளிக்கடை, மளிகைக்கடை உள்ளிட்ட 6 கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்தன.

இதையடுத்து 6 கடைகளையும் அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News