செய்திகள்

பொன்னேரியில் டெங்கு கொசு ஒழிப்பு: 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2017-10-23 07:04 GMT   |   Update On 2017-10-23 07:04 GMT
பொன்னேரி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆர்.டி.ஓ.முத்துசாமி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பொன்னேரி தேரடி தெருவில் உள்ள திருமண மண்டபங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது மண்டபத்தில் உள்ள பிளாஸ்டிக் டப்பாக்களில் தேங்கி இருந்த நீரை சோதனை செய்தனர்.

அதில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஏ.டி.எஸ். கொசு புழுக்கள் இருந்தன.

இதையடுத்து 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகளை வாரம் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளை அகற்ற வேண்டும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதனை பின்பற்றா விட்டால் திருமண மண்டபங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

இதேபோல் வணிக வளாகங்கள், வீடுகள், மண்டபம், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News