செய்திகள்

சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-10-10 11:50 GMT   |   Update On 2017-10-10 11:50 GMT
அமித்ஷா மகன் ஜெய் அமித் நடத்தும் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு கூடியது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஏ.ஆர்.பி. பாஸ்கர், எம்.பி.சுப்பிரமணி, பாண்டியன், கிருஷ்ணசுவாமி, தாரை குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய் அமித் நடத்தும் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு கூடியது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் ஷேக் இமாம், வசந்தம் சரவணன், சாரதாதேவி, வரதராஜ், சிவக்குமார், சாந்தமூர்த்தி, தேன்மொழி, தனசேகரன் உள்பட பலர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News