செய்திகள்

12 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்க கோரும் வழக்கு: சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2017-10-04 06:36 GMT   |   Update On 2017-10-04 06:36 GMT
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை:

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக அக்டோபர் 12-ம் தேதிக்குள் சபாநாயகர் தனபால் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News