செய்திகள்

ஆளுநர், சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்

Published On 2017-09-19 12:53 GMT   |   Update On 2017-09-19 12:53 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கர்நாடகாவில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர்.

அவர்களை நேற்று சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய விவகாரத்தில் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு விழாக்களை அரசியல் மேடையாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலாளருக்கும், குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News