செய்திகள்

அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் எச்.ராஜா சந்திப்பு

Published On 2017-09-14 07:31 GMT   |   Update On 2017-09-14 07:31 GMT
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார்.
சென்னை:

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சாரணர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கல்வியை காவிமயமாக்க முயற்சிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் தனது மணிவிழாவுக்கு மு.க.ஸ்டாலினை அழைப்பதற்காக எச்.ராஜா இன்று மதியம் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார்.

அறிவாலயத்துக்கு சென்ற எச்.ராஜாவை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் அறிவாலயத்துக்குள் சென்ற எச்.ராஜா மணி விழா அழைப்பிதழை கொடுத்து அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து எச்.ராஜாவிடம் கேட்டபோது இது முழுக்க, முழுக்க எனது மணிவிழா சம்பந்தப்பட்டது. அரசியல் வேறு, இது வேறு.

எனது மணிவிழாவுக்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து வருகிறேன். அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மணிவிழாவுக்கு அழைத்தேன் என்றார்.
Tags:    

Similar News