செய்திகள்

நீட் தேர்வு: மத்திய-மாநில அரசுகளுக்கு மாணவர் நலனில் அக்கறை இல்லை- ஜி.கே. வாசன்

Published On 2017-08-23 05:29 GMT   |   Update On 2017-08-23 05:29 GMT
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை என நாகர்கோவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் கட்சி கொடியேற்றி வைத்தார்.

முன்னதாக மதுரையில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்த அவருக்கு நாகர்கோவில் அப்டா மார்க்கெட் முன்பு த.மா.கா.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு இந்த வருடம் விலக்கு அளிக்க வேண்டுமென்று த.மா.கா. வற்புறுத்தியது. நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் விலக்கு தேவையென்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


இந்த வி‌ஷயத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்களுக்கும் இதில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறோம்.

ஆனால் கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைப்பதுபோல மத்திய அரசும், மாநில அரசும் தவறான அணுகுமுறையை கையாண்டு கொண்டிருக்கின்றன.

தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும், மத்திய அரசும் நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். கடைசி நேரத்திலாவது தங்கள் தவறுகளை மத்திய அரசு திருத்தி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News