செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார்

Published On 2017-08-22 15:48 GMT   |   Update On 2017-08-22 15:48 GMT
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை வைகோ சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 7 மாதங்களாக ஓய்வில் உள்ளார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலமாகவே உணவு வழங்கப்பட்டு வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருணாநிதியின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த 16-ம் தேதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த உணவுக் குழாய் அகற்றப்பட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அவரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர், கருணாநிதியை சந்தித்த வைகோ, அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.
Tags:    

Similar News