செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இரா.முத்தரசன் ஆகியோரை படத்தில் காணலாம்.

நீட் தேர்வை எதிர்த்து முத்தரசன்- தா.பாண்டியன் சாலை மறியல்

Published On 2017-07-25 08:21 GMT   |   Update On 2017-07-25 08:21 GMT
சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நீட் தேர்வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடந்தது.
சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

வீடு இல்லாதோருக்கு வீடு வழங்க வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது.

மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் குறித்து தா.பாண்டியன் கூறியதாவது:-

தமிழகம் தற்போது காஷ்மீராக மாறி வருகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

வராக்கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. அதுபோல விவசாயிகள் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது. மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News