செய்திகள்

கவுண்டன்பாளையத்தில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2017-07-22 16:48 GMT   |   Update On 2017-07-22 16:48 GMT
கவுண்டன்பாளையத்தில் அதிகாலை வேளையில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன்பாளையத்தை அடுத்த குண்டு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தயாளம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள பால் பூத்துக்கு பால் வாங்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென தயாளம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். தயாளம்மாள் திருடன்...திருடன் என அலறல் சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் செயினுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.

இதுகுறித்து தயாளம்மாளின் மகன் அரிகிருஷ்ணன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News