search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியிடம் நகை பறிப்பு"

    • 2 வட மாநில வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தனர்.
    • இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை

    கோவை சூலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு பூரணம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவும் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். பின்னர் காதலர்கள்கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இளம்பெண்ணுக்கு மீண்டும் முன்னாள் காதலனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கணவரை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.  

    • திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த செண்பகவல்லி வாடகைக்கு வீடு உள்ளதாக அறிவிப்பு பலகையை தொங்கவிட்டுள்ளார்.
    • வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர்கள், வீட்டில் வாடகை குறித்து விசாரித்தனர்

    திருச்சி

    திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி (வயது70). இவர் தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வீடு உள்ளதாக அறிவி ப்பு பலகையை தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர்கள், வீட்டில் வாடகை குறித்து விசாரித்தனர்.

    பின்பு அவர்களை செண்பகவல்லி மாடியில் உள்ள வீட்டை காட்டுவதற்காக அழைத்து சென்றார். அப்பொழுது திடீரென்று செண்பகவள்ளியை சமையல் அறைக்கு தள்ளி அவர் அணிந்திருந்த 8.5 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளார்.

    இது குறித்து செண்பகவல்லி கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்லம் (வயது 60). வீட்டின் தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருபவர் ராமலிங்கம். இவரது வீடு பரவாய் கிராமத்தில் அமைந்துள்ளது. ராமலிங்கத்தின் தாயார் செல்லம் (வயது 60). இந்த நிலையில் நேற்று செல்லம் வீட்டின் தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராமலிங்கம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த செல்லம் என்பவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்ம நபர்கள் நள்ளிரவில் பறித்துச் சென்றுள்ளார்.

    இதில் தூக்கம் கலைந்து அதிர்ச்சி அடைந்த செல்லம் கூச்சலிட்டதால் அவரது மகன் ராமலிங்கம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் திருடனை பிடிக்க விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த மர்ம நபர் பறித்த நகையோடு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

    இதுகுறித்து ராமலிங்கம் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருடர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு 2 பேரும் தப்பி சென்றனர்.
    • பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை சிவானந்தபுரம் ஜனதா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜீவரத்தினம் (வயது 72).

    இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜீவரத்தினத்திடம் இந்த பகுதியில் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர்கள் திடீரென மூதாட்டியை மிரட்டி தாக்கி கீழே தள்ளினர். பின்னர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    இதனையடுத்து மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு 2 பேரும் தப்பி சென்றனர். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.

    பின்னர் நடந்த விவரங்களை மூதாட்டி அவர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் கடந்த சில நாட்களாக தனியாக இருக்கும் மூதாட்டி மற்றும் முதியவர்களை குறி வைத்து நகை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×