என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னம் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    குன்னம் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • செல்லம் (வயது 60). வீட்டின் தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருபவர் ராமலிங்கம். இவரது வீடு பரவாய் கிராமத்தில் அமைந்துள்ளது. ராமலிங்கத்தின் தாயார் செல்லம் (வயது 60). இந்த நிலையில் நேற்று செல்லம் வீட்டின் தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராமலிங்கம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த செல்லம் என்பவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்ம நபர்கள் நள்ளிரவில் பறித்துச் சென்றுள்ளார்.

    இதில் தூக்கம் கலைந்து அதிர்ச்சி அடைந்த செல்லம் கூச்சலிட்டதால் அவரது மகன் ராமலிங்கம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் திருடனை பிடிக்க விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த மர்ம நபர் பறித்த நகையோடு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

    இதுகுறித்து ராமலிங்கம் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருடர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×