கோவையில் தொடர் சம்பவம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு 2 பேரும் தப்பி சென்றனர். பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் தொடர் சம்பவம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
Published on

கோவை:

கோவை சிவானந்தபுரம் ஜனதா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜீவரத்தினம் (வயது 72).

இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜீவரத்தினத்திடம் இந்த பகுதியில் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர்கள் திடீரென மூதாட்டியை மிரட்டி தாக்கி கீழே தள்ளினர். பின்னர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர்.

இதனையடுத்து மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு 2 பேரும் தப்பி சென்றனர். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.

பின்னர் நடந்த விவரங்களை மூதாட்டி அவர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் கடந்த சில நாட்களாக தனியாக இருக்கும் மூதாட்டி மற்றும் முதியவர்களை குறி வைத்து நகை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com